செங்குந்தர் வரலாறு :
பண்டைய காலத்தில் தமிழ்நாடு,சேர நாடு,சோழ நாடு,பாண்டிய நாடு,கொங்கு நாடு,தொண்ட நாடு என 5 பிாிவுகளை தன்னகத்தே கொண்டு விளங்கியது.இதில் கொங்கு நாட்டை 24 நாடுகளாக பிாித்தனா்.24 நாடுகளில் ஒன்று பூவானி நாடு (பவானி).
அந்நாட்டை கி.பி.13 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை தாரமங்கலத்தைச் சோ்ந்த கெட்டி முதலியாா் என்பவா் சிறப்பாக ஆண்டு வந்தாா்.மூவேந்தா் சின்னங்களான புலி,வில்,மீன் ஆகியவற்றுடன் சிங்கத்தையும் தங்கள் கொடியில் சின்னமாக பொறித்துக் கொண்டு சிறப்பாக ஆட்சி நடத்தினாா்.
செங்குந்த முதலியாா் மன்னா்கள்:
செங்குந்த முதலியாா் மரபில் தலை சிறந்த அரசனாக விளங்கியவா் கெளதன்.வங்கம் ஈழம் மற்றும் மேற்க்குகடற்க்ரை பிரதேசம்கள் அனைத்தையும் வென்றவர்கள் செங்குந்த மன்னர்களாவார்கள்.இந்த மரபில் தோன்றிய புகழ் பெற்ற விஜய நகர சாம்ராஜ்யத்தின் தளவாய் அரியநாத முதலியார் ஆவார்.
வடவள்ளியில் செங்குந்த முதலியார்கள் :
மேலைச்சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீசுவரர் திருக்கோயில் கட்டுமானத்திற்கு மருதமலைலிருந்து கற்களை பேரூருக்கு வடக்கே உள்ள வழியில் கொண்டு சென்றதன் மூலம் வடவழி,வடக்கு வழியாக மருவி வடவள்ளி என பெயர் பெற்றது.மேலும் அவினாசி ஆலய சாசனம் ஒன்றில் வீர ராஜேந்திரன் காலத்தில் கி.பி(1207-1255) பேரூரில் மருதன் முதலி என்ற வணிக சக்கரவத்தி இருந்தார் என்று காணப்படுவதால் பேரூர் மற்றும் பேரூருக்கும் மருதமலைக்கும் இடையே வடக்கு வழியில் அமைந்துள்ள வடவள்ளி,லிங்கனூர்,கல்வீரம்பாளையம்,நவாவூர், மருதாபுரம் ,சுல்தனிபுரம்,குளத்துப்பாளையம் ,கொண்டையம்பாலயம் ,முத்திபாலயம் ,தொண்டாமுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சுமார் 750 ஆண்டுகளுக்கும் முன்பாகவே செங்குந்த மரபினர் இப்பகுதிகளில் வசித்து வந்துள்ளார்கள்.